tamilnadu

சோபியானில் மினி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 11 மாணவர்கள் உயிரிழப்பு

சோபியானில் மினி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாdனதில் 11 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியானில் செங்குத்தான பள்ளத்திற்குள் கம்ப்யூட்டர் பயிற்சி கல்வி நிறுவன மாணவர்கள் சென்ற மினி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்து தொடர்பாக தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இந்த விபத்தில்  9 மாணவிகள் உள்பட 11 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில்  காயம் அடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

;